தேவதை
எல்லோரும் சொல்கிறார்கள்
நீ
தேவதையென்று.
எனக்கு
உடன்பாடில்லை!
வேண்டுமானால்
எப்போதாவது
தேவைதையப் பார்த்தால்
நீ!
என்கிறேன் நான்!
--------------------------------------------------------
இதயங்கள் ஏனடி?
கண்களைத் திற!

விரலுக்குத் தானடி
பூட்டினாய்
மோதிரத்தை!
இதயங்கள்
ஏனடி
இறுகிக் கொண்டன?
--------------------------------------------------------கண்களைத் திற!
கண்களைத் திற!
தீரட்டும்
கவிதைப் பஞ்சம்.
--------------------------------------------------------
காதலுக்காய் . . .

அடம்பிடிக்கும் இதயம்!

அதை வாங்கித் தா
இதை வாங்கித் தா
என்று அடம்பிடிக்கும்
திருவிழா குழந்தையைப் போல்
உன்னைக் கை காட்டி
வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்கிறது
என் காதல்!
--------------------------------------------------------
வி(சி)த்திரம்!

வேண்டும்!

இலவசம்!

கள்வனின் காதலி!

ஈரமான இதயம்!

தீர்ப்பு எழுதி விட்டு
விசாரணை நடத்துவதைப் போல்
காதலை வீசி விட்டு
காரணம் கேட்கிறது
உன் கண்கள்.
--------------------------------------------------------
வேண்டும்!
உனக்கு
நான் வேண்டும்.
எனக்கு
நீ வேண்டும்
காதலுக்கு
நாம் வேண்டும்!
--------------------------------------------------------
இலவசம்!
உன்னிடம் நான் பெற்ற
முத்தத்திற்கு
இலவசமா
இந்த புன்னகை?
--------------------------------------------------------
கள்வனின் காதலி!
கள்வனாய் இருந்து
கவிஞனானவன் வால்மீகி.
கவிஞனாய் இருந்து
உன்னைத் திருடி
கள்வனாய் ஆனவன் நான்.
--------------------------------------------------------
ஈரமான இதயம்!
மழை தூவிய நேரம்
மொட்டை மாடிக்கு ஓடிவந்தாய்
கொடியில் காய்ந்திருந்த துணிகளை
அவசர அவசரமாய் எடுத்தாய்.
காய்ந்த துணிகளை சரி!
என் ஈரமான இதயத்தையும்
ஏனடி வாரி சுருட்டிக் கொண்டு போகிறாய்?
--------------------------------------------------------
வளையல்!
உடைந்து போன
வளையல் துண்டுகளைப் பார்த்து
"இதோடு சேர்த்து நீ உடைத்த
வளையல்களின் எண்ணிக்கை
நூறு என்றாய்"
உன் புன்னகையில்
நான் உடைந்து போன
எண்ணிக்கையை விடவா
இது அதிகம் ?

ஓவியா . . .

மௌனம். . .
உன் மெளனம்!

சந்திப்புகளில். . .

சொல்லாதே யாரும் கேட்டால் . . .

அடிமையின் சுகம் . . .
சிறைவாசத்தை விட

கையைப் பிடித்து இழுக்கையில்
உடைந்து போன
வளையல் துண்டுகளைப் பார்த்து
"இதோடு சேர்த்து நீ உடைத்த
வளையல்களின் எண்ணிக்கை
நூறு என்றாய்"
உன் புன்னகையில்
நான் உடைந்து போன
எண்ணிக்கையை விடவா
இது அதிகம் ?
--------------------------------------------------------
ஓவியா . . .
ஓவியக் கண்காட்சியில்
ஒவ்வொரு ஓவியமாய் கைகாட்டி
"இதற்கு என்ன அர்த்தம்?"
என்று கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஓவியங்களின்அர்த்தம்
புரிந்துகொள்ளும் திறன்
எனக்கிருந்தால் தான்
உன்னை எப்போதோ
புரிந்து கொண்டிருப்பேனடி!
--------------------------------------------------------
மௌனம். . .
புரிந்தும் புரியாமல் இருப்பது
உன் மெளனம்!
அது தான் என்னை
இருந்தும் இல்லாமல்
செய்து விடுகிறது . . .
--------------------------------------------------------
சந்திப்புகளில். . .
உனக்கும் எனக்குமான
சந்திப்புகளில்
நம்மைவிட மெளனமே
அதிக நேரம் பேசிக்கொள்கிறது . . .
--------------------------------------------------------
சொல்லாதே யாரும் கேட்டால் . . .
"ரகசியம்"
என்றவுடன்
காதுகளை நீட்டுகிறாயே
பைத்தியக்காரி!
இந்த ரகசியம்
காதுகளுக்கு அல்ல!
உன் இதழ்களுக்கு. . .
--------------------------------------------------------
அடிமையின் சுகம் . . .
சிறைவாசத்தை விட
கொடுமையானது.
அடிமைத்தனத்தை விட
அபாயகரமானது.
உன்னிடமிருந்து
நான் பெறும் விடுதலை!
--------------------------------------------------------
கிளிஜோசியம்!
என்
உள்ளங்கை ரேகைப் பார்த்து
எதிர்காலம் சொன்னாய்.
அப்போது தான் நம்பினேன்.
கிளி ஜோசியம் சொல்லும் என்று . . .

கருப்பன் என் காதலன்!

உயிர் தருவாயா?!

கவிஞனான காரணம்!

துடிதுடிக்க!

என் நிறத்தைப் பற்றி
உன் தோழிகள்
கிசுகிசுத்துக் கொண்டிருந்த நேரம் . . .
"போங்கடி உங்களுக்கு இதே வேலை தான்" என்று
ஓடி வந்து
"கருப்பன் என் காதலன்" என்று
கன்னத்தைக் கிள்ளினாய்
நெஞ்சில் காயமானது!

மரித்த மலராய்
நான்
பறித்து உயிர் தருவாயா?
நான்
பறித்து உயிர் தருவாயா?
--------------------------------------------------------
கவிஞனான காரணம்!
வண்ண வண்ண
ஆடைகளில் வந்து
என்னை வட்டமிடும் அழகைவிட
கனவுப்பொழுதுகளில்
கறுப்பு வெள்ளை
தேவதையாய் வவந்து
கவிதையாய் சிரிக்கும்
அந்த அழகுதானடி
என்னை கவிஞனாக்குகிறது . . .
ஆடைகளில் வந்து
என்னை வட்டமிடும் அழகைவிட
கனவுப்பொழுதுகளில்
கறுப்பு வெள்ளை
தேவதையாய் வவந்து
கவிதையாய் சிரிக்கும்
அந்த அழகுதானடி
என்னை கவிஞனாக்குகிறது . . .
--------------------------------------------------------
துடிதுடிக்க!
துடிதுடிக்க
தூண்டிலில் இழுத்து
திரும்பவும்
குளத்திலேயே
வீசி எறிந்து
விளையாடுகிறது
இந்த காதல் . . .
தூண்டிலில் இழுத்து
திரும்பவும்
குளத்திலேயே
வீசி எறிந்து
விளையாடுகிறது
இந்த காதல் . . .
--------------------------------------------------------
- இன்பா (எ) ச.சிவானந்தம்
No comments:
Post a Comment